ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (20:34 IST)

'லியோ' பட 2 வது சிங்கிலை பாடியது இவரா? பாட்டு ஹிட்டுதான்!

leo vijay
விஜய்யின் ‘லியோ’ படத்தின் 2 வது சிங்கிலை அனிருத் பாடியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.

லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து,  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா  உள்ளிட்ட  முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ள  நிலையில்,  ‘லியோ பட இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதியில் நடத்த,  நேரு உள்விளையாட்டு அரங்கம் உட்பட இடங்களை பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே லியோ பட இரண்டாவது சிங்கிலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், இதில், காஷ்மீரில் ஷூட்டிங் செய்த காட்சிகளும் உள்ளது.