ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 23 மார்ச் 2023 (18:53 IST)

7 நிமிட வீடியோவை வெளியிட்ட ‘லியோ’ படக்குழு.. இணையத்தில் வைரல்..!

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக நடந்த நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பு முடிவடைந்து விஜய் உள்பட அனைவரும் சென்னை திரும்பி விட்டனர். இந்த நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தபோது எடுத்த வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் 7 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த வீடியோவில் மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிரிலும் பட குழுவினர் எவ்வாறு பணிபுரிந்தனர் என்பது குறித்த காட்சிகள் உள்ளன. அந்த குளிரில் கேமராவை இயக்குவது எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பது குறித்து கேமரா பிரிவில் உள்ளவர்கள் பேட்டி அளித்திருந்தனர்
 
குளிர் மட்டுமின்றி மழையும் பெய்ததால் மழையிலும் கூட படப்பிடிப்பை நிறுத்தாமல் தாங்கள் பணி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva