ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (17:17 IST)

நான் பணம் வாங்கியது உண்மைதான், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: மாதேஷ் கண்ணீர் வீடியோ..!

madhesh
நான் பணம் வாங்கியது உண்மைதான், அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியது உண்மைதான், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரபல பத்திரிக்கையாளர் மாதேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். மதன் ரவிச்சந்திரன் என்பவர் நடத்திய ஆப்ரேஷனில் பல பத்திரிகையாளர்கள் சிக்கினார் என்பது அவர்கள் பணம் மற்றும் மது பாட்டில்கள் வாங்கிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாதேஷூம் இதில் சிக்கி இருந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
அந்த வீடியோவில் நான் நிதானம் தெரியாமல் அந்த வீடியோவில் தெரிவித்ததெல்லாம் உண்மைதான், எனக்கு பணம் கொடுத்தார்கள் நான் வாங்கியதும் உண்மைதான், இதற்காக நாம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
 
பல அரசியல் தலைவர்களை நான் மிகைப்படுத்தி சில சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தேன், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன் என்னுடைய குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் குழந்தையுடன் கூட விளையாட முடியாத அளவுக்கு நான் மிகவும் உடைந்து போய் உள்ளேன் என்று கூறியுள்ளார். அவரது வீடியோ வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran