வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (09:48 IST)

ஒரே நாளில் மாபெரும் சாதனை படைத்த 'நா ரெடி தான் வரவா' பாடல்!

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நா ரெடி என்ற பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களுடன் தளபதி விஜய் தனது பாணியில் செமையாக டான்ஸ் ஆடிய நிலையில் இந்த பாடலின் பிரம்மாண்டத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 
 
கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த பாடல் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சரியம் ஏற்படும் என்பது மட்டுமின்றி தியேட்டரில் எழுந்து ஆட வைக்கும் என்பது உறுதி. விஜய் அனிருத் அசல் கோலார் உள்ளிட்டோர் பாடிய இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுதி உள்ளார் என்பதும் இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.  
 
இந்நிலையில் இந்த பாடல் தற்போதுவரை 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாத்தி கம்மிங் பாடலின் சாதனையையும் இப்பாடல் முறியடித்துள்ளதாக பேசப்படுகிறது. எனவே விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை கொண்டாடி வருகிறார்கள்.