1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (16:11 IST)

லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் மிஷ்கின்!

விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. நேற்று இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆனது. இந்த படத்திற்கு ’லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் என ஏராளமான வில்லன் நடிகர்கள் நடிக்கின்றனர். முன்னதாக லோகேஷ் விஷாலை வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் விரும்பினார். ஆனால் விஷால் படத்தில் வேண்டாம் என்பதில் படத்தின் தயாரிப்பாளர் லலித் உறுதியாக இருந்தாராம். ஏனென்றால் விஷால் சமீபகாலமாக கால்ஷீட் சொதப்பல்கள் செய்துவருவதால் வேண்டாம் எனக் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் சில நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட மிஷ்கின் தன்னுடைய மீதிக் காட்சிகளுக்கான ஷூட்டிங்குக்காக விரைவில் காஷ்மீர் செல்ல உள்ளாராம்.