வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (06:49 IST)

லியோ பிளாஷ்பேக் பொய்யா? ரசிகர்களின் கேலியை அடுத்து வீடியோவை இறக்கிய தயாரிப்பு நிறுவனம்!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்தன. அதற்குக் காரணம் மிகவும் திராபையாக உருவாக்கப்பட்ட இரண்டாம் பாகம்தான். இந்நிலையில் அதை சமாளிக்க ரிலீஸூக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் சொல்லப்பட்ட பிளாஷ்பேக் பொய்யானது எனக் கூறிவருகிறார். ஆனால் அதையும் ரசிகர்கள் இப்போது கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது மன்சூர் அலிகான் கதாபாத்திரம் பிளாஷ்பேக்கை சொல்வதற்கு முன்னர் “அவனவன் 1008 கத சொல்லுவான். இது என்னோட பர்ஸ்பெக்டிவ்” என சொல்லும் வசனக் காட்சியை இப்போது தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த காட்சி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.