ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (17:15 IST)

’லியோ’ வெற்றிவிழா.. ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.. அதிர்ச்சி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நாளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் நிலையில்  இந்த விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
’லியோ’ திரைப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற இருந்த நிலையில் அந்த விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த ரசிகர்களுக்கு ’லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த வெற்றி விழாவுக்கு காவல்துறை தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 
 
அந்த அறிவிப்பில் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுக்கு மட்டுமே வெற்றி விழாவில் கலந்து கொள்ள அனுமதி என்றும் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 
Edited by Mahendran