புதிய படம் பற்றிய அப்டேட் வெளியிட்ட லைகா நிறுவனம்
லைகா படத் தயாரிப்பு நிறுவனம் தன் புதிய படத்தைப் பற்றிய அப்டேட் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைகா. இந்த நிறுவனம், விஜய்யின் கத்தி, தானா சேர்ந்த கூட்டம், ரஜினி –ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 ஆகிய படங்களை தயாரித்தது.
இதையடுத்து , , மணிரத்னம் இயக்கத்தில், ரஹ்மான் இசையில், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன்-1 வெளியாகி ரூ.450 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.
இதையடுத்து, விரைவில், பொன்னியின் செல்வன்-2 படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் கூட்டணியில் உருவாகும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் லைகா தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், நாளை காலை லைகா புதிய திரைப்படத்தில் அறிவிப்பை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.