செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (10:25 IST)

லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் முடக்கம் – எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி!

மி டூ விவகாரத்தில் இயக்குனர் சுசி கணேசன் மீது புகார் கூறியுள்ள லீனா மணிமேகலைக்கு சுசி கணேசனின் மனைவி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மி டூ விவகாரம் தமிழ் சினிமாவில் முக்கிய விவாதப் பொருளாக மாறக் காரணமானவர்களில் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையும் ஒருவர். 13 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுசி கணேசன் தன்னை அவருடையக் காரில் வைத்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறினார். இந்த புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை கடந்த 9 ஆம் தேதி முடக்கியது. அதை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது சம்மந்தமாக பதிலளிக்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.