ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் முன்னணி நடிகை !
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளான அனுஷ்கா, நயன் தாரா, த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம் மார்க்கெட் நிலவரப்படி சம்பளமும் அதிகம்.
இந்நிலையில் பிரபல நடிகை பார்வதி நாயரும் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
குறிப்பாக நேற்று அவரது நடிப்பில் உருவாகிவரும் ரூபம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தை தாமரைச் செல்வன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.