1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (14:06 IST)

''தலைவரின் அசத்தல் ஸ்டைல் ''- ரஜினியைப் பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்

jailer
ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிலான காவாலா  பாடலைப் பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ரஜினி நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள்  நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள  இந்த படம் வரும்  ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடக்சன்  உள்ளிட்ட  இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ஜெயிலர் பட முதல் சிங்கிலான #Kaavaalaa என்ற பாடல்   நேற்று முன் தினம்   சன்டிவி யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. இதில், ஷில்பா ராவ், அனித் குரலில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் அமைந்துள்ள இப்ப்பாடலுக்கு தமன்னா  அசத்தல் நடனம் ஆடியுள்ளார்.  

1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் யூடியூப் டிரெண்டிங்கில் இடம்பெற்ற இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்,  ‘’தலைவர் ரஜினிகாந்தின் அசத்தலான ஸ்டைல், அனிருத் இசை, தமன்னாவின் டான்ஸ், ஜானி மாஸ்டரில் நடனம், இப்பாடலுக்கு ஆற்றல் சேர்க்கிறது. இப்படம் மாபெரும் வெற்றியடைய சன்பிக்சர்ஸ், நெல்சன் மற்றும் படக்குழுவினருக்கு  என் வாழ்த்துகள்’’  என்று தெரிவித்துள்ளார்.