1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:32 IST)

லதா மங்கேஷ்கருக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இந்தி பிண்ணனி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.