வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (22:37 IST)

அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்: லட்சுமி ராமகிருஷ்ணன்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு அஜித்தா? விஜய்யா? என்ற குழப்பத்தில் கோலிவுட் திரையுலகம் இருக்கும் நிலையில் அடுத்த சிவகார்த்திகேயன் இவர் தான் என்று ஒரு நடிகரை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணான் அடையாளம் காட்டியுள்ளார்.
 
சென்னையில் இன்று 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. சின்னத்திரை பிரபலம் கவின், பாடகர் அருண்காமராஜ், ரம்யா நம்பீசன் நடித்த இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.
 
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியதாவது: "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜெயிக்கணும்ங்கிறது என்னோட ஆசை. என்னோட வேண்டுதலும் கூட. சிலர் ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசையா இருப்போம். அந்த மாதிரி இவர் ஜெயிக்கணும்னு ஒரு நலம் விரும்பியா நான் விரும்புறேன். இந்த மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.
 
முதலில் ஸ்ட்ரைக் ஆன விஷயம்.. இந்த பையன் (கவின்) ரொம்ப சூப்பரா இருக்கான்லனுதான். ரொம்ப அழகா, ரொம்ப ஸ்வீட்டா, ரொம்ப கம்ஃபர்டபிளா நமக்கு பார்க்கும்போதே லவ்வபிளான ஒரு முகம். கவின் தான். சிவகார்த்திகேயனை முதலில் பார்க்கும்போது இதே மாதிரி தான் இருந்தது. எவ்ளோ க்யூட்டா இருக்கான். அந்த மாதிரி ஒரு ஃபீல் வந்தது எனக்கு கவினை பார்த்ததும். ஒரு ஷாட்லயே இவங்களோட பெர்ஃபாமன்ஸ் தெரிஞ்சிடும். பெரிய உயரங்கள் போவார்.
 
ஏற்கனவே அடுத்த சிவகார்த்திகேயன் மா.கா.பா தான் என்று கோலிவுட்டில் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இதற்கு போட்டியாக கவினும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.