ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (08:50 IST)

பாத்திரம் தேய்ப்பதும், டாய்லட் கழுவதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் ஏற்கனவே விஜய் டிவி இது குறித்த புரோமோ வீடியோவை வெளியிட்டு உள்ளது என்பதையும் பார்ப்போம்
 
இதனை தற்போது வரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. இருப்பினும் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ரியோ ராஜ் ஆகியோர் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் லீக் ஆகியன என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் நடிகைகளில் ஒருவரான லட்சுமிமேனன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை ஏற்கனவே லட்சுமிமேனன் மறுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார் 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக தொடர்ந்து வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இது முழுக்க முழுக்க வதந்தி. நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைக்கவும், மற்றவர்கள் பயன்படுத்திய டாய்லெட்டை கழுவுவதும் என் வேலை அல்ல 
மேலும் கேமரா முன் நாடகத்திற்காக சண்டை போடுவதும் எனக்கு பிடிக்காத ஒன்று. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். பிக்பாஸ் குறித்து மோசமாக விமர்சனம் செய்துள்ள லட்சுமி மேனனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது