ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (20:08 IST)

விஜய் சேதுபதி வெளியிட்ட ’குட்டி ஸ்டோரி’ பட ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் !

கவுதம் வாசுதேவ், விஜய், வெங்கட் பிரபு, நலம் குமாரசாமி ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி , இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்களிப்பில் சுமார் 4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகுயுள்ள படம் குட்டி ஸ்டோரி. இப்படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பிரபல இயக்குநர்கள் கவுதம வாசுதேவ், நலன் குமாரசாமி, விஜய், வெங்கட் பிரபு ஆகிய இயக்குநர்களின் 4 கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரியாக உருவாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தை ஹிட் பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ( 01-02-2021 ) வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குட்டி ஸ்டோரி படம் வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.