33 வருட கனவு நிறைவேறியது; வைரலாகும் குஷ்பு டுவீட்
நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ரவி சாஸ்திரியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 33 வருட கனவு நிறைவேறியது என டுவீட் செய்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு எப்போதும் டுவிட்டரில் பிஸியாக இருப்பது வழக்கம். குஷ்பு டுவிட்டரில் தனது தினசரி நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது டுவீட் படு வைரலாகி உள்ளது. 33 வருடம் கழித்து தனது கனவு நிறைவேற போகுகிறது என முதலில் டுவீட் செய்தார்.
அதற்கு அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பல கேள்விகள் கேட்டு ரீ டுவீட் செய்தனர். பெரும்பாலானோர் தமிழக அரசியல் குறித்து கேள்வி கேட்டு டுவீட் செய்திருந்தனர்.
ஆனால், குஷ்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்தது குறித்து பதிவிட்டார். என் கனவு நிறைவேறிவிட்டது. ஒரு வழியாக என் ஹீரோ ரவி சாஸ்திரியை சந்தித்தேன். அவரை சந்திக்க 33 ஆண்டுகள் காத்திருந்தேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும் ரவி சாஸ்திரியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தற்போது இவரது டுவீட், டுவிட்டரில் வைரலாகி வருகிறது.