மீண்டும் சீரியலுக்கு வரும் குஷ்பூ… அதுவும் இந்த சேனலிலா?
வட இந்தியாவைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிகளை ஈட்டுவது வாடிக்கையானது. அந்த வகையில் தமிழ்நாட்டில் குஷ்பூ அடைந்த பிரபலத்துக்கு ஈடில்லை. அதன் பின்னர் இயக்குனர் சுந்தர் சி யைத் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.
அதன் பின்னர் குஷ்பு அரசியலில் இறங்கியதால் நடிப்புக்கு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொண்டார். திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின. பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் இப்போது குஷ்பூ மீண்டும் ஒரு சீரியலில் நடிக்கவுள்ளார். டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சரோஜினி என்ற சீரியலில் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த சீரியலுக்கான ஷூட்டிங் தொடங்கி தற்போது நடந்து வருகிறது.