1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (09:37 IST)

மாஸ் மசாலா… மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளோடு வெளியான குருதி ஆட்டம் டிரைலர்!

அதர்வா நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

குருதி ஆட்டம் திரைப்படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீகணேஷ் இயக்க, ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் முன்பே முடிந்துவிட்டாலும் இன்னும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த நிறுவனம் தயாரித்திருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தை விநியோகித்த வகையில் ராக்போர்ட் முருகானந்தம் தங்களுக்கு 1.4 கோடி ரூபாய் தரவேண்டி உள்ளதாகவும், அதை தராமல் அவர் தயாரித்துள்ள குருதி ஆட்டம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து நடந்த வழக்கு விசாரணையால் படத்தின் ரிலீஸ் 7 மாதங்கள் வரை தள்ளிப் போனது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்று படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அறிவித்திருந்தார். இதையடுத்து தற்போது படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி  வரவேற்பைப் பெற்றுள்ளது. அதர்வா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஆக்‌ஷன் படமாக குருதி ஆட்டம் உருவாகியுள்ளது. அதற்கான முன்னோட்டமாக எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக குருதி ஆட்டம் திரைப்படம் உருவாகியுள்ளது.