1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (18:05 IST)

வெளிநாடுகளில் சாதனை வசூல் நிகழ்த்தும் துல்கர் சல்மானின் குருப்!

துல்கர் சல்மான் நடித்துள்ள குருப் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள குரூப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது.  இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

இந்த படம் மலையாளம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் 14 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. மோகன் லாலின் புலி முருகன் மற்றும் லூசிபர் ஆகிய படங்கள் மட்டுமே குருப்புக்கு முன்னர் வசூலில் உள்ளன.