வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:03 IST)

குட்டி ராதிகா யார் என்றே தெரியாது – கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிரடி!

நடிகை குட்டி ராதிகாவை தனக்கு யார் என்றே தெரியாது என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தமிழில் இயற்கைப் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை குட்டி ராதிகா. அந்த படம் வெற்றிபெற்று தேசிய விருது வரை பெற்ற நிலையில் அடுத்து அவர் நடித்த சில படங்கள் சரியாகப் போகாததால் அவர் திரையுலகில் இருந்து விலகினார். அவர் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்து குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். குமாரசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துஇ விட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் குமார்சாமியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியபோது தனக்கு குட்டி ராதிகா யார் என்றே தெரியாது என சொல்லி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மோசடி வழக்கில் கைதான‌ ஜோதிடர் யுவராஜ் சுவாமியிடம் இருந்து நடிகை குட்டி ராதிகா ரூ.1.5 கோடி பணம் பெற்றுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக குட்டி ராதிகாவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான் பத்திரிக்கையாளர் இது குறித்து கேட்டபோதுதான் தனக்கு குட்டிராதிகா யார் என்றே தெரியாது என்றும் ஏன் தேவையில்லாத கேள்விகளைப் பத்திரிக்கையாளர்கள் கேட்கிறீர்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்.