செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (10:56 IST)

’ஜென்டில்மேன் 2’ படத்தின் நாயகி அறிவிப்பு!

’ஜென்டில்மேன் 2’ படத்தின் நாயகி அறிவிப்பு!
கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
 
இந்த படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி பெயரும் நயன்தாரா தான் என்றும் ஆனால் இவரது முழுப்பெயர் நயன்தாரா சக்கரவர்த்தி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படத்தில் பசுபதிக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் தான் இந்த 19 வயது நயன்தாரா சக்கரவர்த்தி என்பதும் இவர் தான் இந்த படத்தின் நாயகி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த படத்தின் நாயகன் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது