ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (07:55 IST)

தயாரிப்பாளர் ஆகிறார் கே.எஸ்.ரவிகுமார்: உதவியாளருக்கு செய்யும் உதவி!

தயாரிப்பாளர் ஆகிறார் கே.எஸ்.ரவிகுமார்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்தவரும் ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியருவமான கே எஸ் ரவிக்குமார் தற்போது தயாரிப்பாளராக உள்ளார்
 
கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்து இருக்கின்றன. ரவிக்குமார் தயாரிக்கும் திரைப்படம் ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற கேஎஸ் ரவிக்குமார் தனது உதவியாளர் ஒருவரை இயக்குனராக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் மிக விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கேஎஸ் ரவிக்குமார் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற திரைப்படத்தில் சுராஜ், சோபின் ஷாஹிர், பார்வதி உள்பட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது