செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:33 IST)

எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள்… ஊடகங்களுக்கு கிரித்தி சனோன் வேண்டுகோள்!

மறைந்த பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவின் மறைவுக்கு இரங்கல் செலுத்த வந்தவர்களை ஊடகங்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் அதிகமாக பகிர்ந்தன.

பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்னரான சித்தார்த் ஷாகுல் என்பவர் சமீபத்தில் மாரடைப்பால் காரணமானார். 40 வயதான அவருடைய மறைவு இந்திய திரை உலகையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில தொடர்களிலும் நடித்து 2003 ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் வென்றவர் என்பதால், இவரின் இறுதி அஞ்சலிக்கு பல முன்னணி நடிகர் நடிகைகள் குடும்பத்தோடு வந்தனர்.

இதை ஆன்லைன் ஊடகங்கள் மற்றும் இணயதளங்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தன. சில புகைப்படங்கள் எல்லயைத் தாண்டியவையாக இருந்தன. இதுபற்றி பேசியுள்ள பாலிவுட் நடிகை கிரீத்தி சனோன் ‘ஊடகங்கள் எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள். இறுதிச் சடங்குகளுக்கு ஊடக வெளிச்சம் வேண்டாம். இழப்பைச் சந்தித்து, சோர்வடைந்திருக்கும் மனிதர்கள் முகத்தில் உங்கள் கேமரா வெளிச்சத்தை செலுத்தி அவர்களை மேலும் துன்புறுத்தாதீர்கள். ’ எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.