ஆனந்தி ராசியான நாயகி: கிருஷ்ணா பேட்டி!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (20:05 IST)
கிருஷ்ணா, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பண்டிகை. இந்த படத்தை நடிகை விஜயலட்சுமி தயாரித்துள்ளார்.

 
 
இந்த படத்தை பற்றி கிருஷ்ணா பேட்டி ஒன்று அளித்தார். அவர் கூறியதாவது, கழுகு, யாமிருக்க பயமேன் போன்ற படங்கள் எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தந்துள்ளது.
 
இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். இந்த கதை என் திரை உலக வாழ்வில் முக்கிய படமாக இருக்கும். எனக்கு ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி.
 
பட தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் கடந்து அவர் இந்தப் படத்துக்காக நிறைய உழைத்தார் என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :