1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (17:13 IST)

வெங்கட் பிரபுவுடன் சண்டை போட்ட க்ரிஷ்

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன், பாடகர் க்ரிஷ் ட்விட்டரில் சண்டை போட்டுள்ளார்.



 


வெங்கட் பிரபு தயாரிப்பில், சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.கே. நகர்’. வைபவ், சனா அல்தாப், சம்பத் ராஜ், இனிகோ பிரபாகர், கருணாகரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இந்த டீஸரில், கமலைக் கலாய்ப்பது போன்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் கொதிப்படைந்திருக்கும் நிலையில், கமலின் தீவிர ரசிகரான பாடகர் க்ரிஷ், ட்விட்டரிலேயே கோபமாகப் பதிவிட்டுள்ளார்.

‘கடைசி டயலாக்கில் யாரைச் சொல்ல ட்ரை பண்ற? என் தலைவனைப் பத்தி இருந்தா, நீ பிரியாணிடி’ என்று கோப சிம்பலுடன் வெளிப்படையாகவே வெங்கட் பிரபுவின் ட்விட்டர் ஐடியைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்து வெங்கட் பிரபு, ‘டேய் நல்லவனே… எதா இருந்தாலும் நேர்ல பேசுவோம். படத்தைப் படமா பாரு’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், ‘முடியாது, நீ படமா எடு. சூழ்நிலையை ஏன் மேன் டயலாக்கா வைக்குற?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் க்ரிஷ்.