வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (19:01 IST)

அரவிந்த் சாமியின் அப்பா இந்த பிரபல சீரியல் நடிகரா? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

தமிழ் சினிமாவின் ஆண் அழகான நடிகர் அரவிந்த் சாமி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
 

அரவிந்த் சாமியின் அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. ஆனால் முதன்மை வேடமேற்று நடித்த முதல் படம் மணிரத்னத்தின் ரோஜா படம்தான். இந்தப் படம் மூலம் அவர் நட்சத்திர ஹீரோவாக பெருவாரியான பெண் ரசிகைகளை கவர்ந்தார். தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். 
 
இந்நிலையில் அரவிந்த் சாமியின் அப்பா யார் என்று ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம் மெட்டி ஒலி, ஆனந்தம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இல்லத்து ரசிகர்களிடம் பெரும் புகழ் பெற்ற நடிகர் டெல்லி குமாரின் மகன் தான் அரவிந்த் சாமி. இந்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.