திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (10:11 IST)

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

ஜி வி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி   ‘இடிமுழக்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.  இந்த அந்த படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் ‘கோழிப்பன்னை செல்லதுரை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரித்த இந்த படம் கடந்த வாரம் வெளியானது.  இந்த படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வெளியாகினாலும் படத்துக்கு சுத்தமாகக் கூட்டம் வரவில்லை.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி “என் படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்பாக்ஸில் வந்து திட்டுங்கள். படம் பிடித்திருந்தால் ஸ்டேட்டஸாக வையுங்கள். எங்கள் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தபோது வேறு எந்த படமும் ரிலீஸாகும் என்று அறிவிக்கவில்லை. ஆனால் அதே நாளில் 7 படங்கள் ரிலீஸாகியுள்ளன.” என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.