திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (09:26 IST)

IMDB-ல் 9.1 புள்ளிகளைப் பெற்ற கூச முனிசாமி வீரப்பன் தொடர்!

மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் சம்மந்தமாக நெட்பிளிக்ஸில் “தி ஹண்ட் ஃபார் வீரப்பன்” என்ற தொடர் ரிலீஸாகி கவனம் பெற்றது. ஆனால் அதில் அதிகாரவர்க்கத்தின் பார்வை மட்டுமே இடம்பெற்றிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

அதையடுத்து வீரப்பனை பலமுறை நேரில் கண்டு அவரின் வீடியோக்களை வெளியிட்ட நக்கீரன் நிறுவனம் ஜி 5 தளத்தோடு இணைந்து “கூச முனிசாமி வீரப்பன்” என்ற தொடரை எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் வீரப்பன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பார்வை அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக நேர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த சீரிஸ் வெளியானதில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் இப்போது IMBD தளத்தில் 9.1 புள்ளிகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.