திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (20:21 IST)

'கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்டரி நாளை ரிலீஸ்

Veerappan
தென்னிந்தியாவில் போலீஸாரால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட வீரப்பனின் வாழ்க்கை  வெப்தொடராக  நாளை வெளியாகவுள்ளது.

கூச முனிசாமி வீரப்பனனின் வாழ்க்கையும் அவரது வரலாற்றையும்    விவரிக்கும் வகையில், டாகுமெண்டரி சீரிஸ் உருவாகியுள்ளது.

இதை தீரன் புரடக்சன்ஸ்  சார்பில் பிரபாபதி தயாரித்துள்ளார். இந்த சீரிஸ்  நாளை முதல் ஜீ5 ல் வெளியாகவுள்ளது.

நாளை இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடரை ஜெயச்சந்திர ஹாஸ்மமி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இது மொத்தம் 6 எபிஷோட்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.