வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2017 (12:32 IST)

நடிகையின் ட்விட்: கலக்கத்தில் கோலிவுட்??

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்க கமிட் ஆனார்.


 
 
படங்களில் மட்டுமின்றி முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வரும் அவர் இதற்காக சில வருடங்களாக சென்னையிலேயே இருந்தார்.
 
தற்போது எமி Supergirl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருக்கு சென்றுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 
 
"வந்த 5 நிமிடத்தில் முடிவெடுத்துவிட்டேன் 2018-ல் இது தான் என் வீடு" என கூறியுள்ளார். இதனால் இனி அடுத்த ஒரு வருடத்திற்கு எமியை படங்கலில் காண முடியாது என தெரிகிறது.
 
சமீபத்தில் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் குயீன் படத்தில் கமிட் ஆகியிருந்த அவர் திடீரென் அந்த படங்களில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.