"கொலையுதிர் காலம்" நயன்தாராவின் டெரர் லுக் வெளியீடு!
கொலையுதிர் காலம் படத்தின் இரண்டாம் லுக் வெளியானது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. பூஜா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படம், பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ளது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும்போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவனிடம் இருந்து அந்த எழுத்தாளர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை.
இந்தியிலும் ‘கொலையுதிர் காலம்’ உருவாகியுள்ளது. நயன்தாரா வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். தமன்னாவோடு இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபுதேவா மற்றும் பூமிகா இருவரும் நடித்துள்ளனர். இந்தியிலும் சக்ரி டோலட்டியே படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்ட்டரை வெளியிட்டிருக்கின்றனர் படக்குழுவினர்.
இந்த போஸ்டரில் நயன்தாராவின் அழுகை முகம் , கோபம் கலந்த முகம் , டெரர் பார்வை என மூன்று முகங்கள் அடங்கியுள்ளது.
2019 ஜனவரியில் படம் ரிலீஸ் ஆகவுள்ளதை இந்த போஸ்டரில் குறிப்பிட்டு மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளனர்.