புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (12:09 IST)

அடடே கேஜிஎப் ராக்கி பாயா இது? இணையத்தில் கவனம் ஈர்க்கும் புகைப்படம்!

கேஜிஎப் படத்தில் இளம் வயது ராக்கியாக நடித்த சிறுவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

அந்த படத்தில் சிறுவயது ராக்கியாக நடித்த சிறுவனின் கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் அந்த பையன் வளர்ந்து பெரியவனாகிவிட்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகிக் கவனத்தை பெற்றுள்ளது.