செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (11:17 IST)

''கே.ஜி.எஃப் '' ஹீரோ யாஷின் பிறந்த நாள்.... இணையதளத்தில் டிரெண்டிங்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராகத் தற்போது வலம் வருபவர் நடிகர் யாஷ். இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு ஜம்பாடா ஹுடுஜி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

இதையடுத்து, மொகிஜினா மனசு, ராதிகா பண்டி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அதன்பின், 2012 ஆம் ஆண்டு லக்கி மற்றும் ஜானு ஆகி இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

அதன்பின்னர், 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில், இவது நடிப்பில் வெளியான படம் ஜே.ஜி.எஃப்-1 .  இப்படம் கன்னட சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றது.

பான் இந்தியா படமாக இது வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று, யாஷை பான் இந்திய ஸ்டாராக உயர்த்தியது. 2022 ஆம் ஆண்டு கேஜிஎஃப் -2 வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தின் 3 வது பாகம் உருவாகி வருகிறது.

இன்று தன் 37 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் யாஷிக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.