1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (14:09 IST)

குட்டி ராக்கி பாய் உடன் விளையாடும் நடிகர் யாஷ் - வைரல் வீடியோ!

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதுமட்டுமின்றி இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

இந்த படத்தின் தன்னை உலகறிய செய்த நடிகர் யாஷ் கடந்த 2016ம் ஆண்டு ராதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற பெண் குழந்தை மற்றும் ஆயுஷ் என்ற மகன் உள்ளனர். தற்போது தனது மகன் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் பாடல் ஒலிக்கும் சத்தத்தை கேட்டு எழுந்து ஆட்டம் போடும் ஆயுஷை யாஷ் ஊக்கப்படுத்தும் வகையில் பேசுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.