செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (19:29 IST)

நேரடியாக OTT தளத்தில் கே.ஜி.எப் 2...? நடிகர் யாஷ் கூறிய தகவல்!

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.

2018ம் ஆண்டு வெளியான இப்படம் பல விருதுகளை குவித்து கன்னட சினிமா உலகை பெருமையில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய நடிகர் யாஷ்
ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்பட்டு இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். கன்னட சினிமாவில் முதன் முறையாக 100 கோடி வசூல் ஈட்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான தேசிய விருது பெற்றது.

கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளிவந்த இப்படம் பல்வேறு வெற்றிகளை குவித்தது. அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது.கொரோனா ஊரடங்கினாள் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. இதனால் ஸ்டுடியோவில் இருந்தபடியே படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து பேட்டியளித்த யாஷ்,  இது வெறும்  வெறும் வதந்தி தான் கே.ஜி.எப் 2 நிச்சயம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும் என்று கூறினார்.