புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (15:50 IST)

யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நடிகை!

நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

ஆனால் அவரால் உச்ச நடிகையாக வரமுடியவில்லை. இரண்டாம் கட்ட ஹீரோக்களுடனே ஜோடி போட்டு வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் யோகா செய்யும் புதிய புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.