செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (18:49 IST)

’பீஸ்ட்’ நெகட்டிவ் விமர்சனம் எதிரொலி: ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு

beast kgf2
இன்று வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு கடும் விமர்சனங்கள் குவிந்து உள்ளதை அடுத்து பல திரையரங்குகளில் நாளைய இந்த படம் தூக்கப்படும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் யாஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் அந்த படத்திற்கு 150 முதல் 200 திரையரங்குகளில் மட்டுமே தற்போது கிடைத்துள்ளது.
 
இந்த  நிலையில் ’பீஸ்ட்’  படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நாளையே 50 முதல் 100 தியேட்டர்கள் அதிகரிக்கும் என்றும் இந்த படத்தின் ரிசல்ட்டை பொருத்து 300 முதல் 400 திரையரங்குகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது