திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (13:07 IST)

'பீஸ்ட்' பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் நூறு பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல்!

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. 

 
எப்போது விடியும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. பேனர்கள், தோரணங்கள், பாலாபிஷேகம், பட்டாசு என பல திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
 
பீஸ்ட்' திரைப்படம் குறித்த அறிவிப்பிலிருந்தே வெளியீட்டுக்காகக் காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் கொண்டாடிக் களித்து வருகின்றனர். அதேநேரம் சில இடங்களில் படம் வெளியாகாததால் அங்கிருந்த விஜய் ரசிகர்கள் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கரூரில் 'பீஸ்ட்' வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். படம் வெளியாகும் இடங்களில் ஏராளமான வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
 
தாம்பரம் வித்தியா திரை அரங்கில் வெளியான பீஸ்ட் படம் பார்த்தவர்களுக்கு விஜய் முன்னால் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விஜய் ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுகு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் 100 பேருக்கு வழங்கினார். இதனால் படம் பார்த்த மகிழ்ச்சியில் வந்தவர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கிய பெட்ரோலுடன் சென்றனர்.