செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (21:07 IST)

விஜய் ஆண்டனி ரிலீஸ் செய்த’’கேட்டா கேளு’’ பாடல் !

தமிழ் சினிமாவில்முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கேட்டா கேளு என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்துள்ளவர் நடிகர் விஜய் ஆண்டனி.

இவர் கார்த்திக் குணசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் கதை என்ற படத்தின் முதல் சிங்கில் பாடலான கேட்டா கேளு என்ற பாடலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை யுகி பிரவீன் எழுத, நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார்.

இப்பாடல் யூடியூபில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இப்பாடலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.