புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:06 IST)

மம்மூட்டி மீது வழக்கு பதிவு செய்த கேரள போலிஸார்!

நடிகர் மம்மூட்டி கொரோனா விதிகளை மீறியதாக போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரும் இந்திய சினிமாவிலேயே அதிக தேசிய விருதுகளையும் பெற்ற மம்மூட்டி 370 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் கிளம்பிய போது ரசிகர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அதை மீறியதாக மம்மூட்டி மற்றும் திரைப்பட இயக்குனர் ஒருவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.