8 வருடத்துக்குப் பின் மீண்டும் திரையில் ’சுறா’ – கேரள ரசிகர்கள் தரமான சம்பவம் !

Last Modified செவ்வாய், 14 ஜனவரி 2020 (16:58 IST)
விஜய்யின் 50 ஆவது படமான சுறா வரும் ஜனவரி 26 ஆம் தேதி கேரளாவில் மீண்டும் ரிலிஸ் ஆக உள்ளது.

விஜய், தமன்னா மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது 50வது படமான சுறா வெளியானது. இந்த படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் கேலி செய்யப்பட்டன.

மொத்தத்தில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகவும் மோசமான படமாக அது அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தை பற்றி இப்போது ஒரு செய்தி வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கொல்லம் நண்பன் பாய்ஸ் என்ற விஜய் ரசிகர் மன்றத்தினர் வரும் ஜனவரி 26ம் தேதி இந்த படத்தை காலை காட்சிக்கு அங்குள்ள ஒரு தியேட்டரில் மறுபடியும் ரிலீஸ் செய்கின்றனர். மேலும் இந்த விழாவில் கலந்துகொள்ள கொல்லம் மாவட்ட ஆட்சியரையும் அழைத்துள்ளனர். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :