இணையத்தில் வைரலான கேரள தம்பதிகளின் போட்டோ ஷூட் – நெட்டிசன்கள் ட்ரோல்!
சமீபகாலமாக திருமணத் தம்பதிகள் ப்ரீ வெட்டிங் மற்றும் போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட்கள் நடத்துவது வாடிக்கையாகியுள்ளது.
திருமண புகைப்படத் தொகுப்புகள் இப்போது வேறு லெவலில் சென்று கொண்டிருக்கின்றன. அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்யவும் தயாராக உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் கேரளத்தம்பதிகளின் போஸ்ட் வெட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவின. அதற்குக் காரணம் அந்த தம்பதிகளின் கவர்ச்சிகரமான போஸ்களே காரணம்.
இந்நிலையில் இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பிக்க கடுப்பான தம்பதிகள் தாங்கள் மோசமாக எதுவும் செய்யவில்லை. நாங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்றே அவ்வாறு போட்டோஷூட் செய்தோம் எனக் கூறியுள்ளனர்.