வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (17:23 IST)

தந்தையின் பேச்சை கேட்டு சம்பளத்தை குறைத்த கீர்த்தி சுரேஷ்...!

கொரானா ஊரடங்கு உத்தரவால் சினிமா தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அது மட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்கள் பல நஷ்டங்களை சந்தித்து வருவதாகவும் தெரிகிறது.

இதையடுத்து சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது சம்பளங்களில் இருந்து ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதாக அறிக்கை விட்டனர். அந்த வகையில் விஜய் ஆண்டனி, இயக்குனர் ஹரி, நடிகர் ஹரீஷ் கல்யாண் போன்றோர் வெளிப்படையாகக் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக கூறினர்.

இந்நிலையில் தற்ப்போது கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தில் இருந்து  20 முதல் 30 சதவீதம் குறைத்துக்கொண்டுள்ளார், இது குறித்து கூறியுள்ள அவர், நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என எனது தந்தை தயாரிப்பாளர் என்ற முறையில் கருத்து தெரிவித்தார். ஒரு நடிகையாக இதை நான் வரவேற்கிறேன். மேலும், சினிமாவில் உள்ள அனைவரும் இதை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.