1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மே 2024 (16:51 IST)

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ன சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. இப்போது ரகு தாத்தா,கண்ணிவெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அவர் அறிமுகமாகும் பேபி ஜான் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் சந்துரு இயக்கத்தில் அவர் நடித்த ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என படத்தைத் தயாரிக்கும் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.