1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (08:07 IST)

பாட்டி, அம்மா, சகோதரியுடன் கீர்த்தி சுரேஷ்: மகளிர் தின ஸ்பெஷல் புகைப்படம்!

பாட்டி, அம்மா, சகோதரியுடன் கீர்த்தி சுரேஷ்:
உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து திரை உலகினர் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் மகளிர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவு செய்தனர்
 
அந்த வகையில் தமிழ் தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தன்னுடைய பாட்டி அம்மா மற்றும் சகோதரி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் 
 
கீர்த்தி சுரேஷுடன் அவரது குடும்பத்தில் உள்ள நான்கு பெண்களும் ஒரே புகைப்படத்தில் இருந்ததை அடுத்து அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். மேலும் கீர்த்தி சுரேஷ்க்கு அவரது ரசிகர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர் 
 
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது அண்ணாத்த, சாணிக் காகிதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது