1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 மார்ச் 2021 (12:00 IST)

ரொம்ப அட்வான்ஸாக பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கீர்த்தி சுரேஷ்… யாருக்கு தெரியுமா?

நடிகை வரலட்சுமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பிறந்தநாள் வாழ்த்து கூறி பல்ப் வாங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சக நடிகையான வரலட்சுமி சரத்குமாருக்கு சமூகவலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பல்ப் வாங்கியுள்ளார்.

ஆம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி வரலட்சுமிக்குப் பிறந்தநாள். ஆனால் அவர் மார்ச் 3 ஆம் தேதியே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரின் பதிவைப் பகிர்ந்த வரலட்சுமி ‘நன்றி செல்லம். ஆனா என்னோட பிறந்த நாள் 5ஆம் தேதி தான்’ எனக் கூறி ரிடீவிட் செய்தார். கீர்த்தி சுரேஷும் வரலட்சுமியும் சண்டக்கோழி மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.