வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (21:05 IST)

சூப்பர் ஸ்டார் முக்கிய அறிவிப்பு…ரசிகர்கள் கொண்டாட்டம்!

தனது படத்தின்  டீசர் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்தி s சுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகிறார். இப்படம் குறித்து எப்போது அப்டேட் வெளியாகும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதி சர்காரு வாரு பாட்டா பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று  ஆகஸ்ட் 9 ஆம் தேதி )சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் என்பதால் அன்று சர்க்காரு வாரு பாட்டா படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் எனத் தகவல் வெளியான நிலையில், நேற்று மாலை இப்ப்ரடத்தின் டீசர் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், இந்த டீஸர்  குறைந்த நேரத்தில் ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்று ஐந்து லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது.

இதுகுறித்து சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகல்….எல்லோர் என் பிறந்தநாளுக்கு என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி…. சர்க்காரு வாரு பேட்டா பட  டீசர் வெற்றியடைந்துள்ளாது. உங்களை எண்டெர்டெயின் செய்ய எங்கள் படக்குழுவால் காத்திருக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்