1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified செவ்வாய், 11 ஜனவரி 2022 (17:30 IST)

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

கடந்த சில நாட்களாக திரை உலக பிரபலங்கள் சிலர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுக்கும் குர்ஆகொரோனா னோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் லேசான பாதிப்பு என்பதால் தேவையான அளவு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துக் கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகும் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் உடனடியாக சென்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவும் என்றும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் குரகொரோனாவில் இருந்து நான் விரைவில் குணமாகிவிடுவே என்றும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றும் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்