திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:57 IST)

யாரும் தவறாக அனுகினால் நான் சினிமாவை விட்டே விலகிவிடுவேன்… கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போது தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். தான் நடித்த மகாநடி படத்துக்காக தேசிய விருது பெற்றவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

அதையடுத்து மாமன்னன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அவர், திரையுலகில் பெண் நடிகர்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல் பற்றி பேசியுள்ளார். அதில் “என்னிடம் பலரும் இதுபற்றி பேசியுள்ளார்கள். எனக்கு அந்த மாதிரியான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை யாராவது என்னிடம் தவறாக அனுகினால், நான் சினிமாவிலேயே இருந்து விலகி வேறு வேலைக்கு செல்லவும் தயங்கமாட்டேன்” எனக் கூறியுள்ளார்.