திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (18:05 IST)

சானிடைசரை குடித்த அரசு அதிகாரி ...வைரலாகும் வீடியோ

மும்பை மாநாகராட்சியில்  பட்ஜெட் தாக்கல் செய்யும் பொது,  தண்ணீர் என நினைத்துச் சனிடைசரை எடுத்துக் குடித்த அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிக் சகல் அடுத்த நிதியாண்டிற்கான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது, உதவி ஆணையர் ரமேஷ் பவார் தனக்கு முன் வைத்திருந்த பாட்டிலை எடுத்துத் தண்ணீர் என நினைத்து எடுத்துக் குடித்தபோதுதான் தெரிந்தது அது சானிட்டர் என்று.

பின்னர் தான் குடித்ததை வெளியே கக்கினார். இதுகுறித்த வீடியோ வைரலாகிவருகிறது.